Published : 04 May 2018 09:38 AM
Last Updated : 04 May 2018 09:38 AM

வெளிநாட்டில் சொத்து விவரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க வருமான வரி துறைக்கு அனுமதி

முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள விவரங்களை மறைத்துள்ளதாக கருப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி அமர் வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘‘விளக் கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்திடம் வருமானவரி முதன்மை இயக்குநர் விசாரணை நடத்தலாம். ஆனால், கருப்புப் பண தடைச் சட்டம் அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீ்ழ் இறுதி முடிவு எடுப்பது என்பது இந்த வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது. இதுதொடர்பாக வருமானவரி முதன்மை இயக்குநர் ஜூன் 5-க்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x