Published : 25 Aug 2014 08:54 AM
Last Updated : 25 Aug 2014 08:54 AM

மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை தமிழக அரசே ஏற்படுத்த வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

மக்களிடம் மது பழக்கத்துக்கு எதி ரான விழிப்புணர்வை தமிழக அரசே ஏற்படுத்த வேண்டும் என் றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்ளிடம் அவர் மேலும் கூறியது:

வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிபொறுப்பேற்ற பாஜக மத்தியில் பொறுப்பேற்று 90 நாட்கள் ஆகியும் எந்தவிதத்திலும் காங்கிரசின் கொள்கைகளிலிருந்து மாறுபடவில்லை.

காப்பீட்டுத் துறையில் வெளி நாட்டு நிறுவனங்களை அனுமதிப் பது என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கி றோம். அதேபோல பாதுகாப்பு துறை யில் வெளிநாட்டு மூலதனம் என்று சொல்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறை. சில தினங் களுக்கு முன் மத்திய நிதியமைச் சர் மானியங்களை குறைக்கப்போவ தாக கூறியுள்ளார். மக்கள் கசப்பான மருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமரும் கூறியுள்ளார். மக்களுக்கு கசப்பான மருந்தும் கார்பரேட் நிறுவனங்களுக்கு இனிப் பான மருந்தும் வழங்கும் நிலையில் மத்திய அரசு உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் டீசல் விலை உயர்வை கண்டித்த தமி ழக அரசு, டீசல் விலையை ரயில் கட்டணத்துடன் இணைக்கும் தற் போதைய மத்திய அரசை பாராட்டு வது விநோதமாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் மத்திய அரசு என்எல்சியின் 5 சதவீத பங்குகளை விற்கும்போது பொதுத்துறை நிறு வன பங்குகளை விற்ககூடாது என்று தமிழக அரசே அந்த பங்குகளை வாங்கிக்கொண்டது. ஆனால், இப்போது பாஜக அரசு பொது நிறுவன பங்குகளை ரூ.48 ஆயிரம் கோடிக்கு விற்பதை ஆதரிக்கிறது.

எண்ணூர் மின் உற்பத்தி நிலையத்துக்கு பாய்லர் , டர்பன் உள்ளிட்ட பாகங்களுக்கான ஆர் டரை தமிழக அரசு பெல் கம் பெனிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு வறட்சியால் பாதிக் கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவார ணம் அறிவிக்க வேண்டும். மணல் கொள்ளையால் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கும். எனவே, மணல் கொள் ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிமுக பொறுப்பேற்ற பின்பும் சட்டம் ஒழுங்கில் எந்தவித முன்னேற் றமும் இல்லை. 2010-ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை 6708, 2012-ல் 7192 ஆக அதிகரித்துள்ளது. குழந்தை கள் மீதான வன்முறை 2012-ல் 1036, தலித் மக்கள் மீதான வன் முறை மற்றும் கவுரவ கொலை களும் அதிகரித்துள்ளன. கடந்த 2 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வழங்கப் படவில்லை. முதியோர் ஓய்வூதியம், பென்ஷன் பல இடங்களில் நிறுத்தப் பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தும், தமிழக மக்களை பாதிக்கக்கூடிய மாநில அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஆகஸ்ட் 25- முதல் 31ம் தேதி வரை 10 ஆயிரம் குழுக்க ளாக சென்று மக்களை சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்த உள்ளது. செப்டம்பர் 1-ல் பெருந்திரள் உண்ணா விரதமும் நடைபெற உள்ளது.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x