“காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை” - எடப்பாடி சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் தாக்கு

“காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலை” - எடப்பாடி சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் தாக்கு
Updated on
1 min read

சென்னை: “காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும். மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த திமுக ஆட்சியில் ஏற்படுகிறது. காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது, சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது , சட்டம் - ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in