ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில்உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் கொலைக்கான காரணம், மூளையாக செயல்பட்ட வர்களின் பின்னணி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதைக் கண்டறியும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை ஒன்றன் பின் ஒன்றாக போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வரு கின்றனர்.

ஏற்கெனவே பொன்னை பாலு,ராமு, அருள் ஆகிய 3 பேரையும் 2-வது முறையாக 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக பொன்னைபாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை போலீஸார் மீண்டும் காவலில் எடுத்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in