

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன.
ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கம் (இந்தியா) (GLRA INDIA) முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், ஆலோசகர் வி.கனகசபாபதி ஆகியோர் கூறியதாவது:
இந்தியாவில் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளன.
பீகாரில் 2 மாவட்டங்கள் மற்றும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு மாவட்டம் என இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 5 மாவட்டங்களை தேர்வு செய் துள்ளோம்.
இந்த மாவட்டங்களில் 2.7 லட்சம் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அரசின் திட்டங் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2014 முதல் 2018 வரையில் இந்த நிதி பயன் படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஜெர்மன் தொழுநோய் மற்றும் காசநோய் நிவாரண சங்கத்தின் சர்வதேச மருத்துவ ஆலோசகர் ஆஸ்வால்டு பெலிங்கர், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் உடன் இருந்தனர்.