சீமான் மீது அவதூறு வழக்கு: திருச்சி எஸ்.பி. முடிவு

சீமான் மீது அவதூறு வழக்கு: திருச்சி எஸ்.பி. முடிவு
Updated on
1 min read

திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் திருச்சி எஸ்.பி.தான் என்று சீமான் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங் களில் வைரலானது.

இந்நிலையில், சீமான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருச்சி எஸ்.பி. வருண்குமார், ‘‘பொதுமேடையில் பேசினாலும் கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம், நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சீமானுக்கு ஏற்கெனவே எனது வழக்கறிஞர் மூலம் குற்றவியல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவரை நீதிமன்றத்தில் சந்திப்பேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in