கடந்த 3 மாதங்களில் 6,032 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

கடந்த 3 மாதங்களில் 6,032 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்
Updated on
1 min read

சென்னை: கடந்த 3 மாதங்களில் வெவ்வேறு துறைகளுக்கு 6,032 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மே 1 முதல் ஜூலை 31 வரையிலான (3 மாதங்கள்) டிஎன்பிஎஸ்சி மூலம் குருப்-2-ஏதேர்வு வாயிலாக 5,413 பேரும்வேளாண் விரிவாக்க அலுவலர்பதவிக்கு 51 பேரும் தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 பேரும் உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கு 9 பேரும் ஒருங்கிணைந்த கணக்கு பணிகள் அடங்கிய பதவிகளுக்கு 43 பேரும் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு 82 பேரும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 பேரும் பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 பேரும் என மொத்தம் 6,032 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in