தமிழகம் முழுவதும் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது: பாஜக குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது: பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெற்று கொண்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஒரு பெண் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகம் முழுவதும் கூலிப்படை கும்பல்களின் பெருக்கம் அதிகமாகி படுகொலைகளைச் செய்து வருவது மாநிலத்தின் சட்டம் ஒழுங்குபடுபாதாளத்துக்கு சென்று விட்டதை படம் போட்டுக் காட்டு கிறது.

சர்வசாதாரணமாக கொலைகள்: இந்த கொலைகள் தனிப்பட்ட காரணங்களினாலோ, அரசியல் காரணங்களினாலோ நடந்தாலும், தமிழகத்தில் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர் கேட்டை இது உணர்த்துகிறது.

குற்றங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்குதான் காவல் துறை உள்ளது என்பதை அரசு மறந்துவிட்டது. ஆளும் கட்சியின் அராஜகம், காவல் துறையின் அலட்சியம் ஆகியவையே இந்த குற்றங்கள் தொடர்கதையாக நீண்டு கொண்டிருப்பதற்கான காரணம்.

ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இன்னும் உணராது இருக்கிறார் முதல்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பணை உடைப்பு: மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.6.5 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல் இந்ததடுப்பணை அருகில் இருந்த உயர்அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் தூண்களும் சாய்ந்து விட்டன என்பது அப்பணியின் தரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

ரூ.6.5 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதங்கள் கூட நிலைக்காதது, இந்த ஆட்சியின் இயலாமையை, நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. தரமற்றஇந்த பணியினை செய்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in