Published : 15 May 2018 11:29 am

Updated : 15 May 2018 11:29 am

 

Published : 15 May 2018 11:29 AM
Last Updated : 15 May 2018 11:29 AM

திருப்பதி கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானை தரிசனம் செய்ய திங்கள்கிழமை இரவு திருப்பதி சென்றார். பின்னர் அவரை திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, இரவு திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்தார். இரவு திருமலையில் தங்கிய முதல்வர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழுமலையானை தரிசித்தார்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று, தரிசன ஏற்பாடுகள் செய்தனர். இதனை தொடர்ந்து, ரங்கநாயக மண்டபத்தில் முதல்வர் பழனிசாமிக்கு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர் திருமலையிலிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author