கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளிப்பு | வயநாடு நிலச்சரிவு

கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளிப்பு | வயநாடு நிலச்சரிவு
Updated on
1 min read

சென்னை: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்தச் சூழலில் நாடு முழுவதும் அம்மக்களுக்கு தேவையான உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், "வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.25 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சத்தையும், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சத்தையும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in