Published : 16 May 2018 12:33 PM
Last Updated : 16 May 2018 12:33 PM

பிளஸ் 2: தமிழகத்தில் 231 மாணவ மாணவிகள் மட்டுமே 1180க்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி

தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 231 மாணவ, மாணவிகள் மட்டுமே 1180-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 60,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். மேலும், அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 91.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட ஒரு சதவீதம் குறைவாகும்.

தேர்ச்சியான மாணவ, மாணவிகளுள் 231 பேர் 1180 மதிப்பெண்களை விட அதிகமாகவும், 4,847 பேர் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரையும், 8,510 பேர் 1126 முதல் 1150 மதிப்பெண்கள் வரையும், 11,739 பேர் 1,101 முதல் 1125 மதிப்பெண்கள் வரையும், 71,368 பேர் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரையும், 1,07,266 பேர் 901 முதல் 1000 மதிப்பெண்கள் வரையும், 1,43,110 பேர் 801 முதல் 900 மதிப்பெண்கள் வரையும், 1,65,425 பேர் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரையும், 3,47,938 பேர் 700 அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x