Published : 31 May 2018 09:29 AM
Last Updated : 31 May 2018 09:29 AM

விவசாயிகளை அடிமைகளாக பார்க்கிறார்கள்: விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உருக்கம்

விவசாயிகளை எல்லோரும்அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள் என்று தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

மரபணு மாற்றப்பட்ட விதை கள் மூலம் செய்யப்படும் விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பிரசார இயக்கத்தை அச்சிறுப்பாக்கத்தில் நேற்று முன்தினம் அய்யாக்கண்ணு தொடங்கினார். இதையடுத்து நேற்று காஞ்சிபுரம் வந்தவர், ஆட்சியரிடம் நதிகளை இணைக்க அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும், பாலாற்றில் 3 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள ஏரிகளைத் தூர் வாரவேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகள் இந்நாட்டின் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். எங்கள் கரும்பு டன் ரூ.90 விற்கும்போது ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.90. இப்போது ஆசிரியர்களுக்கு ரூ.54 ஆயிரத் தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை ஊதியம். எங்களுக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். எங்கள் நெல் ஒரு மூட்டை ரூ.40 விற்கும்போது சட்டப்பேரவை உறுப்பினருக்கு ரூ.240 ஊதியம். இப்போது சட்டப் பேரவை உறுப்பினருக்கு ரூ.1,05,000 ஆயிரம் ஊதியம். எங்கள் நெல்லுக்கு விலை ரூ.900 மட்டுமே கிடைக்கிறது. விவசாயிகளை அடிமைகளாகப் பார்க்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x