Published : 31 Jul 2024 04:50 AM
Last Updated : 31 Jul 2024 04:50 AM
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலர்களின் குடியிருப்பில் ரூ.1.62 கோடி மதிப்பில்புதிய சமுதாய நல்வாழ்வுக் கூடம்கட்டப்பட்டுள்ளது. இதை தேவிகா ரகுவன்சி நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் வரவேற்புரை ஆற்றிசென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் பேசியதாவது: முப்படைகளில் பணியின்போது உயிரிழந்தாலும் அல்லது ஓய்வுபெற்ற பிறகுஇறந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதற்காகஇம்மாதம் 1-ம் தேதி முதல் 31-ம்தேதி வரைகுடும்ப ஓய்வூதிய குறைதீர் மாதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களில்21 ஆயிரம் ராணுவ வீரர்களின்குடும்பத்தினருக்கு சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில் ஓய்வூதியம் வழங்கி உள்ளோம்.
முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை அலகாபாத்தில் உள்ள முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் செய்து வந்தது. இந்நிலையில்,குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைகளுக்கும் தீர்வு காண சென்னை அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
பின்னர் தேவிகா ரகுவன்சி பேசியதாவது: ‘ஸ்பர்ஷ்’ திட்டத்தின் மூலம் மாதம்தோறும் 32 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. முப்படை வீரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு முன்பு வெவ்வேறு இடங்களில் தீர்வு காணப்பட்டது. தற்போது ‘ஸ்பர்ஷ்’ திட்டம் மூலம் தீர்வு காணப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போர்ட்டலில் ஏற்படும் சில பிரச்சினைகள் 6 மாதத்துக்குள் சரிசெய்யப்படும். ‘ஸ்பர்ஷ்’ சிறந்த ஓய்வூதிய திட்டமாக காகிதமில்லா ஆன்லைன் திட்டமாக செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டு பிரதமரின் டிஜிட்டல் இந்தியா விருது ‘ஸ்பர்ஷ்’ திட்டத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலக ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளுக்கும் அக்டோபர், நவம்பர் மாதம் பாதுகாப்பு துறை சிவிலியன் ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.
முன்னதாக, ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை ஓய்வூதியதாரர்களுக்கு தேவிகா வழங்கினார். விழாவில், முன்னாள் தலைமைபாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் கோபாலன், பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் நிதி ஆலோசகர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT