Published : 30 Jul 2024 05:15 AM
Last Updated : 30 Jul 2024 05:15 AM
சென்னை: விசிகவில் அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் குறைந்தபட்சமாக பெண்கள் 14 பேர், பட்டியலினத்தவர்கள் அல்லாதவர் 15 பேர், இளைஞர்கள் 36 பேருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 144 மாவட்டச் செயலாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்நிலையில், அண்மையில் இணையவழியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பு செய்து சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 234 பேர் நியமிக்கப்படுவர் என திருமாவளவன் அறிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் விசிக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. அதில், தமிழகம் முழுவதிலும் இருந்த வந்திருந்த பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் தாங்கள் கடந்த ஓராண்டில் ஆற்றிய கட்சிப் பணிகள் குறித்த அறிக்கையை திருமாவளவனிடம் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன், விரைவில் 234 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படுவர். அதில் எந்த சமரசமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT