Published : 11 May 2018 09:48 AM
Last Updated : 11 May 2018 09:48 AM

காட்டாங்கொளத்தூர் பகுதியில் சமூக நலத் துறை சார்பில் 1,814 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா காட்டாங்கொளத்தூரில் நேற்று நடை பெற்றது.

மாவட்ட சமூகநலத் துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா காட்டாங்கொளத்தூரில் நடந்தது. காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று 1719 பயனாளிகளுக்கு 13.752 கிலோ கிராம் தங்க தாலிகளும், ரூ.6 கோடியே 21 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவியும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு நிதியுதவி திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 50 மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1814 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமூக நலத்துறை இணை இயக்குநர் ரேவதி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x