Published : 20 May 2018 08:39 AM
Last Updated : 20 May 2018 08:39 AM

ஓஎன்ஜிசி வெளியேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் கிராம மக்கள் முடிவு

கதிராமங்கலத்தின் மண் வளத்தை காக்க, இவ்வூரை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் பூமிக்கடியிலிருந்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால் பாதிக்கப்படுவதாகவும், கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் தொடங்கிய போராட்டம் 365-வது நாளாக (ஓராண்டு நிறைவு) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கதிராமங்கலம் அய்யனார்கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹலான் பாகவி, திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் அமமுக, பாமக, மதிமுகவினர் கலந்துகொண்டு பேசினர்.

கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறும் வரை எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். மத்திய அரசின் சாலைவழித் திட்டத்துக்காக நிலங்களை அழிக்கும் முயற்சியை தடுக்க ஒன்றுபட வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய கிராம மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x