Published : 27 Jul 2024 05:52 AM
Last Updated : 27 Jul 2024 05:52 AM
சென்னை: தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராகப் பதவி வகித்து வரும் அசன் முகமது ஜின்னா, புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டத்தி்ன் கீழ் அரசு குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப் பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள குற்ற வழக்கு தொடர்வுத்துறை துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளகுற்ற வழக்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி அவற்றை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கீழமை நீதிமன்றங்களில் நீதிமன்ற காவலுக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது வழக்கின் ஆவணங்களை நன்கு பரிசீலித்து, நீதிமன்றத்துக்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் உதவிகரமாக இருக்க வேண்டும்.
சிறப்பான பணிக்கு விருது: அரசு தரப்பு சாட்சியாக அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் சேர்க்கப்படும் போது எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.
சிறப்பாகப் பணியாற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கவுரவிக்கும் விதமாக ‘தமிழக முதல்வர்விருது’ வழங்கும் கருத்துருவும் பரிசீலனையில் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும், என்றார்.
பதவி உயர்வு கேள்விக்குறி: இதற்கிடையே தமிழ்நாடு அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘ஏற்கெனவே தமிழகத்தில்அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நியமிக்கப்படுவோர் கிரேடு 2 அதிகாரிகளாகவும், அதன் பிறகு கிரேடு 1ஆகவும், அதன்பிறகு அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி உயர்வில் நியமி்க்கப் படுகின்றனர்
எங்களுக்கு குற்ற தொடர்வுத் துறையில் உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர் என தற்போது பதவிஉயர்வு வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பாரதிய நகரிக் சுரக்க்ஷாசன்ஹிதா சட்டத்தின் கீழ் 15 ஆண்டுஅனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் அல்லது அமர்வு நீதிபதியை நேரடியாக இத்துறையின் இயக்குநராக நியமிக்கலாம் என்றும், அதேபோல 7 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் அல்லது முதல் வகுப்பு குற்றவியல் நடுவரை உதவி இயக்குநராக நியமிக்கலாம் என்றும் நேரடி நியமனத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் எங்களுக்கான பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவேபழையபடி புதிதாக வெளிநபர்களை இப்பதவிகளுக்கு நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையி லேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்’’ என கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT