தமிழக மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் பணிபுரிவார்கள். இவர்கள், தூய்மைப் பணியை கண்காணிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு அபராதம் விதிப்பது, சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பது, தொழில் உரிமம் புதுப்பித்தல் மற்றும் தூய்மைப் பணி விழிப்புணர்வு இயக்கம் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள். இவர்களுடைய பணி மாநகராட்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டல அலுவலகங்களில் ஐந்து சுகாதார அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 3 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் புதிய சுகாதார அலுவலர்களாக (எஸ்.ஓ.,) பிச்சை (திருப்பூர்), திருமால் (கோவை), ராமச்சந்திரன் (கோவை) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மதுரை மாநாகராட்சியில் பணியாற்றிய என்.விஜயகுமார், சி.வீரன் ஆகியோர் கோவைக்கும், ராஜ்கண்ணன் திருப்பூர் மாநகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in