Published : 26 Jul 2024 06:34 AM
Last Updated : 26 Jul 2024 06:34 AM

கோயில் ரோப் கார் வசதி தொடங்கப்பட்ட 2-வது நாளில் பழுது: அந்தரத்தில் தவித்த 3 பெண்கள் பத்திரமாக மீட்பு

குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் ரோப் காரில் இருந்த சக்கரம் நகர்ந்ததால் பாதியில் நிற்கும் பெட்டிகள்.

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் 1,178 அடி உயரத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ரூ.9.10 கோடியில் ரோப்கார்வசதி நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 4 பெட்டிகளில் தலா 2 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று ரோப் கார் இயங்கியபோது காற்று வேகமாக வீசியது. இதனால், கம்பி வடத்தில் இருந்து சக்கரம் நகர்ந்ததால் ரோப்கார் பாதியிலேயே நின்றது. இதையடுத்து, ரோப் காரில் 2 பெட்டிகளில் பயணம் செய்த, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெரியக்காள்(43), ராசம்மாள்(45), கோசலை(42) ஆகிய 3 பெண்கள் அந்தரத்தில் தவித்தனர். இதையடுத்து, ரோப்கார் பழுதைசரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுபழுது நீக்கப்பட்டு, ரோப் காரில் இருந்த 3 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது பலத்த காற்று வீசுவதால் ஆடி மாதம் முடியும் வரை ரோப்கார் சேவையை நிறுத்தி வைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x