விடியல் சேகர், யுவராஜா
விடியல் சேகர், யுவராஜா

தமாகா மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்; விடியல் சேகர், யுவராஜா புதிய பதவியில் நியமனம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

Published on

சென்னை: தமாகா மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் நியமித்துள்ளார். துணைத் தலைவராக விடியல் சேகர், பொதுச் செயலாளராக யுவராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமாகாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், கட்சி நிர்வாகிகளை மாற்ற தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருந்தார். இதற்கிடையில், இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமித்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

மாநிலப் பொருளாளராக இ.எஸ்.எஸ்.ராமன், துணைத் தலைவர்களாக பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், எஸ்.விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாட்ஷா, உடையப்பன், ரங்கராஜன், ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக ராஜேந்திரன், ராஜகோபால், ஜவஹர் பாபு, திருவேங்கடம், ராஜம் எம்.பி.நாதன், எம்.யுவராஜா, ஜி.பி.நம்பி, மனோகரன் என்கிற தசரதன், வேல்முருகன், குலோந்துங்கன், ராணி கிருஷ்ணன், வி.வி.வாசன் ஆகிய 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, 12 அமைப்புச் செயலர்கள், 16 செயலர்கள், 15 கொள்கை பரப்பு செயலர்கள், 31 மாநில செயற்குழு உறுப்பினர்கள், 30 இணை செயலர்கள், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in