

தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாமிடத்தில் கோவை மாவட்டமும், கடைசி இடத் தில் நீலகிரி மாவட்டமும் உள்ளன.
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கடந்த 1993-ம் ஆண்டில், தமிழகத்தில் 19.21 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, 2004-ல் 67.52 லட்சமாக அதிகரித்தது. ஆனால், அது தற்போது, சுமார் 3 மடங்கு அதிகரித்து 1.87 கோடியாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வரும் அதே நேரத்தில், வாகன விபத்துக்களால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத் தில் கடந்த 2009-ல் 13,746 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2013-ல் 15,563 ஆக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று.
கடந்த ஆண்டில் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்திலும், கோவை இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதில், சென்னை (1250), கோவை (954) காஞ்சிபுரம் (920), விழுப்புரம் (824), வேலூர் (772), சேலம் (769), திருப்பூர் (724) ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்துக்களில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் குறைந்த அளவாக நீலகிரியில் 45 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 66,238 ஆகும். இதில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,563. இதில் முந்தைய ஆண்டை விட (16,175) இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.
இது குறித்து போலீஸார் மற்றும் போக்குவரத்துத் துறை யினர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக 2013-ல் விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் 260 ரோந்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 122 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, காவல் தலைமையிடத்தில் உள்ள மாநில போக்குவரத்துத் திட்டமிடல் பிரிவு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நிகழும்போது, இத்தகைய ரோந்து வாகனங்கள் திறம்பட செயல்பட்டு, 28,191 சாலை விபத்துக்களில் 22,440 நபர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
2013 ஜனவரி முதல் 2014 மே மாதம் வரை சரியான நேரத்தில் செயல்பட்டதால் 18,384 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மாநில போக்குவரத்துத் திட்டமிடல் பிரிவு. சாலை பாதுகாப்பு கருத் தரங்குகள், பட்டறைகள் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆண்டுவாரியாக விபத்துகளின் விவரம்:
ஆண்டு | விபத்துகள் | உயிரிழப்புகள் |
2009 | 60794 | 13746 |
2010 | 64996 | 15409 |
2011 | 65873 | 15442 |
2012 | 67757 | 16175 |
2013 | 66238 | 15563 |