Published : 04 May 2018 09:08 AM
Last Updated : 04 May 2018 09:08 AM

சிலம்பம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை கற்பிக்கும் இலவச பயிற்சி முகாம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்கிறது

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிலம்பம், பொய்க்கால் குதிரை, தோற்பாவை கூத்து, ஓவியம் போன்ற பாரம்பரிய கலைகளைக் கற்பிக்கும் இலவச பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க லாம்.

இதுதொடர்பாக உல கத் தமிழாராய்ச்சி நிறுவ னம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு கிரா மிய கலைகள் வளர்ச்சி மையம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் கோடைகால மரபு வழி படைப்பாற்றல் பயிற்சி முகாம் தரமணி யில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை (நேற்று) தொடங்கியுள்ளது.

மறைந்து வரும் தமிழர் மரபுக் கலைகளையும், விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையி லும் அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக வும் இந்த முகாம் நடத் தப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமில் சிலம்பம், பொய்க்கால் குதிரை, தோற்பாவை கூத்து, ஓவியம் மற்றும் கிராமப்புற விளையாட்டு கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். இதில் பள்ளி, கல்லூரி மாணவர் கள் இலவசமாக பங்கேற்று பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு 9840730757, 7358416712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x