

சென்னை: தெருவில் காகிதம் எடுத்து பிழைக்கும் நபருக்கு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலை வழங்கியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சென்னை கிண்டியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது, தெருவோரம் காகிதம்எடுத்து பிழைக்கும் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். உடனே அவரை அழைத்து அமைச்சர் விசாரித்தபோது அவர் நிலைமையை விளக்கினார்.
இதையடுத்து, அமைச்சர்தன்னுடைய வாகனத்தி லேயே அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு கொடுத்தார். பின்னர், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர், மருத்துவர்களிடம் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சொன்னார்.
மருத்துவமனை பணி: தொடர்ந்து, மருத்துவ மனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணி வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிர மணியத்தின் மனிதநேயமிக்க இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.