Published : 23 Jul 2024 05:49 AM
Last Updated : 23 Jul 2024 05:49 AM

வடக்கு மண்டலத்தில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களுக்கு கோப்பை வழங்கிய டிஜிபி

வடக்கு மண்டலத்தில் சிறந்து விளங்கிய 10 காவல் நிலையங்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கேடயம் வழங்கி பாராட்டினார். அவற்றை அக்காவல் நிலைய போலீஸார் பெற்றுக் கொண்டனர்.

சென்னை: தமிழகத்தில் சிறந்து விளங்கும் 10 காவல் நிலையங்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கோப்பை வழங்கி பாராட்டினார். தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் 3 காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த காவல் நிலையங்களுக்கான தமிழ்நாடு முதல்வரின் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிறந்த காவல்நிலையங்கள் கண்டறியப்பட்டு தரவரிசைப்படுத்தி குடியரசு தினத்தன்று அதில் முதல் 3 இடங்கள் பெற்ற மதுரை மாநகர், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம், நாமக்கல் காவல் நிலையம், திருநெல்வேலி மாநகர், பாளையம்கோட்டை காவல் நிலையம்ஆகிய காவல் நிலையங்களுக்கு முதல்வரால் கோப்பைகள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மாவட்டம் - மாநகரங்கள் தோறும் காவல் நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட- மாநகர அளவில் முதல் இடம் பிடிக்கும் காவல்நிலையங்களுக்கு கோப்பைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று, வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும், திருத்தணி காவல் நிலையம், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், திருப்பத்தூர் நகர காவல் நிலையம், ராணிப்பேட்டை காவல் நிலையம், காட்பாடி காவல் நிலையம், திருப்பாபுளியூர் காவல் நிலையம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம், செங்கல்பட்டு நகர காவல் நிலையம், சிவகாஞ்சி காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை காவல் நிலையம் உள்ளிட்ட முதல் இடம் பிடித்த 10 காவல் நிலையங்களுக்கு கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையம் தொடர்ந்து 3 முறைமாவட்டத்தில் முதலிடம் பிடித்து கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x