Published : 11 May 2018 09:46 am

Updated : 11 May 2018 09:46 am

 

Published : 11 May 2018 09:46 AM
Last Updated : 11 May 2018 09:46 AM

பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் வதந்தியால் மனநோயாளி அடித்துக் கொலை: கொலையாளிகள் குறித்து போலீஸ் தீவிர விசாரணை

பொன்னேரி அருகே பழவேற்காடு பாலத்தில் மனநோயாளி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் குறுக்கே பழவேற்காட்டையும், கலங்கரை விளக்கத்தையும் இணைக்கக் கூடிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று இரவு, ஒருவர் தூக்கிடப்பட்ட நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த திருபாலைவனம் போலீஸார், தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பழவேற்காடு பஜார் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த மனநோயாளிதான் சடலமாக தொங்கியவர் என்பது தெரியவந்துள்ளது.

பழவேற்காட்டில் குழந்தை கடத்தல்காரர் என்ற வதந்தி காரணமாக, பொதுமக்களில் சிலர், மனநோயாளியை அடித்துக் கொலை செய்து, பாலத்தில் தூக்கில் சடலமாக தொங்கவிட்டுள்ளது போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, போலீஸார் இதை கொலை வழக்காக பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author