முதல்வர் தொகுதியில் சொந்த கட்டிடம் இல்லாத அரசு கல்லூரி: மாணவர்கள் போராட்டம்

முதல்வர் தொகுதியில் சொந்த கட்டிடம் இல்லாத அரசு கல்லூரி: மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

முதல்வர் தொகுதியில் 12 ஆண்டு களாக சொந்த கட்டிடம் இல்லாத அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வெள்ளிக் கிழமை வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு 12 ஆண்டு களுக்கு மேல் சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளி கட்டிடத்தில் இயங்கிவருகிறது. இக்கல்லூரி முதல்வர் ரங்கசாமி தொகுதியில் உள்ளது.

கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக புதுச்சேரி அரசின் சார்பாக 2005ம் ஆண்டு கல்லூரி அருகே ஆறரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் எந்த பணிகளும் தொடங்கப் படவில்லை. தற்போது கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி யில் இடநெருக்கடி அதிகமாகவே கல்லூரி நடைபெறும் ஒருபகுதி யில் பள்ளிக்கென கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலால் தூர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அரசு கல்லூரிக்கு அடிப்படை வசதி மற்றும் கட்டிடம் கேட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க செயலர் ஆனந்த், துணை செயலர் ஜீவா ரஞ்சித் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது:

வெயில் காலங்களில் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆஸ்பெட் டாஸ் கூரையில் வகுப்புகள் நடக்கிறது. அருகில் கழிவுநீர் வாய்க்காலால் துர்நாற்றம் வீசு கிறது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கண் எரிச்சல், தோல் வியாதியால் பாதிக்கப் படுகிறார்கள். இக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கி கட்டிடப் பணிகளை தொடங்க வேண்டும். இதற்கான பணிகளை தொடங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடத்து வோம். முதல்வர் தொகுதியில் உள்ள இக்கல்லூரி மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in