

காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87 அடியாக இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் தொடர் மழையினால், கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. எனவே அணைகளுக்கு வரும் நீர், காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீ்ர்மட்டம் 87 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 37,729 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 49.28 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து அதிகம் இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.