Published : 06 May 2018 10:19 AM
Last Updated : 06 May 2018 10:19 AM

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 74 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 74 மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ுள்ளனர்.

இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:

மத்திய குடிமைப்பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வின் (யுபிஎஸ்சி - சிவில் சர்வீஸ்) இறுதி முடிவு கடந்த 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 990 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 42 பேர் தேர்வாகியுள்ளனர்.

இதில், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்ற 21 பெண்கள் உட்பட 74 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழக மாணவர்கள் மட்டும் 35 பேர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற கீர்த்திவாசன், அகில இந்திய அளவில் 29-வது இடம் பிடித்துள்ளார். இவர் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

மூன்று நிலைகள் கொண்ட இத்தேர்வுக்கு இந்திய அளவில் கடந்த 2017 ஜூன் 18-ம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழக மாணவர்கள் 810 பேர் உட்பட மொத்தம் 13,365 பேர் தேர்வாகி, முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 423 மாணவர்கள் முதன்மை தேர்வை எழுதினர்.

இவர்களுக்கான 2-ம் நிலை தேர்வு கடந்த 2017 அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடத்தப்பட்டது. இதன் முடிவு கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியிடப் பட்டது.

இந்நிலையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டெல்லியில் பிப்ரவரி 19 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது. இதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமி அகில இந்திய அளவில் மிகச்சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், சிறந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பிற துறை நிபுணர்களைக் கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வை இலவசமாக நடத்தியது. நேர்காணல் கடந்த மாதம் 25-ம் தேதியுடன் முடிந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x