Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

செப்.1 முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: மைசூர், பழநி ரயில்கள் முன்னதாக புறப்படும்

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12661) புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மங்களூர், மைசூர், பழநி ரயில்க ளும் இப்போது புறப்படும் நேரத்துக்கு முன்னதாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12661) புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த ரயில் இரவு 8.50 மணிக்குப் பதிலாக இரவு 8.55 மணிக்குப் புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்ட்ரல் – மங்களூர் எக்ஸ்பிரஸ் (எண்: 12601), இரவு 8.25 மணிக்குப் பதிலாக, 10 நிமிடம் முன்னதாக இரவு 8.15 மணிக்குப் புறப்படும். அதுபோல சென்ட்ரல் – மைசூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16021) இரவு 9.30 மணிக்குப் பதிலாக அரை மணி நேரம் முன்னதாக இரவு 9 மணிக்குப் புறப்படும். சென்ட்ரல் – பழநி எக்ஸ்பிரஸ் (எண்: 22651) இரவு 9 மணிக்குப் பதிலாக இரவு 9.30 மணிக்குப் புறப்படும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (எண்: 22650) அதிகாலை 4.30 மணிக்குப் பதிலாக அதிகாலை 4.05 மணிக்கு வந்துசேரும். பழநியில் இருந்து சென்ட்ரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் (எண்: 22652) அதிகாலை 4.55 மணிக்குப் பதிலாக அதிகாலை 4.15 மணிக்கு வந்துசேரும்.

மதுரையில் இருந்து சென்ட்ரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் (எண்: 22206) காலை 7.10 மணிக்குப் பதிலாக காலை 7.15 மணிக்கு வந்துசேரும்.

அதுபோல, திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் எக்ஸ்பிரஸ் (எண்: 16854), மாலை 5.50 மணிக்குப் பதிலாக மாலை 6 மணிக்கு வந்து சேரும்.

மொத்தமாக சென்ட்ரலுக்கு வரும் 26 ரயில்களின் நேரமும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் 15 ரயில்களின் நேரமும், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் வந்து செல்லும் 6 ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 29 ரயில்களின் வேகம், குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் இருந்து அதிக பட்சம் 160 நிமிடங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் (எண்: 17236) வேகம் 160 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x