Published : 20 Jul 2024 06:10 AM
Last Updated : 20 Jul 2024 06:10 AM

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்: சத்தீஸ்கர் அமிதி பல்கலை. வேந்தர் செல்வமூர்த்தி நம்பிக்கை

சென்னை போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சத்தீஸ்கர் அமிதி பல்கலை. வேந்தர் செல்வமூர்த்தி சிறந்த மாணவர்களுக்கு பட்டம், தங்கப் பதக்கங்களை வழங்கினார். உடன் ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் உமாசேகர் உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை: இளைஞர்களால் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்று சத்தீஸ்கர் அமிதிபல்கலை. வேந்தர் செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமிதி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கல் அமைப்பின் தலைவரும்,சத்தீஸ்கர் அமிதி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான செல்வமூர்த்தி, சிறந்தமாணவர்களுக்கு 38 தங்கப்பதக்கங் களை வழங்கி கவுரவித்தார்.

ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், மருத்துவம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறைகளில் 780 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் செல்வமூர்த்தி பேசியதாவது: நம்முடைய இளைஞர்களைக் கொண்டு இந்தியாவைவளர்ந்தநாடாக மாற்ற முடியும். இந்தியாவின் மக்கள்தொகையான 140 கோடியில்60 சதவீதத்தினர் இளைஞர்கள். அவர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகளாவிய மனித வளத்தில்முக்கிய பங்காற்றப் போகிறவர்கள் இளைஞர்கள்தான். உலகளவில் திறன்பட்ட பணியாளர்களுக்கும், புதியனவற்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் பெரும் தேவையுள்ளது. அதை இந்தியாவால் நிறைவுசெய்ய முடியும். ஆய்வுகள், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு புத்தாக்கல் மனப்பான்மையுடன் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ஒற்றுமையை வளர்த்து, பரிவுடன் கூட்டாக இணைந்து செயல்படும்போது, இந்திய இளைஞர்கள் உலகளாவிய சவால்களான பருவநிலை மாற்றம், ஏழ்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும். இன்றைய உலகுக்கு திறம்பட்ட தலைவர்கள் தேவை. ஆனால், அவர்கள் பரிவுடனும், பொறுப்புணர்வுடனும் எதிர்காலத்துக்கு ஏற்ற முறையில் செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக துணைவேந்தர் உமாசேகர் பேசும்போது,“வரும் ஆண்டுகளில் ஆய்வகம் மற்றும் முதியோர் நல மருத்துவத் துறைகளில் பட்டமேற்படிப்பு தொடங்கப்படவுள்ளது. 2020 தேசியகல்விக் கொள்கையின்படி, உளவியல் ஆலோசனை, சமூகப் பணி, மருத்துவ உதவியாளர் போன்றதுறைகளில் பட்ட மேற்படிப்புகளும், மருத்துவ உயிரி தொழில்நுட்பம், சுகாதார தகவல் மேலாண்மை மற்றும் எண்டாஸ்கோபி தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பு களும், புற்றுநோய் மற்றும் உடல் அசைவு மறுவாழ்வு சிகிச்சை துறைகளில் இரண்டு ஃபெல்லோஷிப் கல்வி திட்டங்களும் இந்த ஆண்டு தொடங் கப்பட்டுள்ளது” என்றார்.

விழாவில் இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், இணை துணைவேந்தர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி முதல்வர்கே.பாலாஜி சிங், பல் மருத்துவத்துறை தலைவர் தமிழ்செல்வன், ஆய்வுத்துறை தலைவர் கல்பனாபாலகிருஷ்ணன், மாணவர்கள் துறை தலைவர் லீனா டென்னிஸ்ஜோசப், தேர்வுகள் கண்காணிப்பாளர் ஆர்.ஜோதிமலர் மற்றும் நிதித்துறை இயக்குநர் ஜே.ரவிசங்கர், பிறதுறை தலைவர்கள், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x