மின் கட்டண உயர்வை கண்டித்து பாமக போராட்டம்: சென்னையில் அன்புமணி தலைமையில் நடந்தது

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில், சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.		           
| படம்: ம.பிரபு |
மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில், சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உட்பட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுமாறும், மாதத்துக்கு ஒரு முறை மின் கணக்கிடுமாறும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, செய்தியாளர் களிடம் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தில் 85 சதவீத சிறு குறுதொழில் நிறுவனங்கள் இந்த மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 23 மாதத்தில் தமிழகஅரசு 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

போராட்டம் தொடரும்: ஊழலைக் குறைத்தாலே மின் சாரத் துறை லாபத்தில் இயங்கும். அதிமுக ஆட்சியின்போது மின்சார கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்று சொன்ன ஸ்டாலின் தற்போது கட்டணத்தை ஏற்றி வருகிறார். இந்த உயர்வை திரும்பப் பெறும்வரை பாமக தொடர் போராட்டங்களை நடத்தும்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பல கட்சிகள் மற்றும் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைநடத்த வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 4,800 டாஸ்மாக் கடைகளும்20,000-க்கும் மேற்பட்ட சந்து கடைகளும் இருக்கின்றன. இவற்றில் கள்ளச்சாரா யம் விற்கப்படுகிறது. விற்பவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in