

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி உள்ளதாக வெளியான தகவலையடுத்து, தனிப்படைபோலீஸார் அங்கு விரைந்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் 16-வதுநாள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி போலீஸார் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். பின்னர் அனைவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது, தப்ப முயன்றதாக திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஜாம்பஜா ரைச் சேர்ந்த ரவுடியின் மனைவிமலர்கொடி, அவரது உதவியாளரான பழைய வண்ணாரப்பேட் டையைச் சேர்ந்த ஹரிகரன், சதீஷ் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக, அதிமுக, பாஜக, தமாகாபோன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருந்த தகவல்வெளியானது. மேலும், பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும், இதற்காக ரூ.1 கோடிக்கு மேல் பணம் கைமாறியதும் தெரியவந்தது. ஆனால், ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைத்து கொலைத் திட்டத்தை அரங்கேற்ற மூளையாக செயல்பட்டது யார் என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
அவர்கள் ஆந்திர மாநிலத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இன்றோடு 16-வது நாளாகும். இதையொட்டி இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் கண் காணிப்பு பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி, சென்னை, எழும்பூர் ரமடாஹோட்டல் அருகே இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
இதில், பண்பாட்டு மைய நிர்வாகிகள், பகுஜன் சமாஜ் கட்சியினர், இதர இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டியும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்க உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் நிர்வாகி கைது: இதற்கிடையே தலைமறைவாக இருந்த புளியந்தோப்பைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.