Published : 19 Jul 2024 05:15 AM
Last Updated : 19 Jul 2024 05:15 AM
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று அதிகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் அதிகாலை 4.45 ம ழ்ணியளவில் இயங்குவது வழக்கம். ஆனால் நேற்று அதிகாலை அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தைச் (சிஐடியு) சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 15-வதுஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக தனியார்மயத்தை நோக்கிச் செல்கின்றன. நிரந்தரத் தன்மையுடைய பணிகளில்கூட தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கும் போக்குஅதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒப்பந்த திருநெல்வேலி கோட்டத்தில் ஓட்டுநர், நடத்துநர் நியமன டெண்டர் இறுதி செய்யப்படஉள்ளது. 2022-ம் ஆண்டு முதல் ஓய்வுபெற்றவர்களுக்கான பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.
அகவிலைப்படி உயர்வு வழங்கதடையாக இருக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மின்சார பேருந்து, மினி பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதுபோன்ற போக்குவரத்துக் கழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதன் காரணமாக பெரும்பாலான பணிமனைகளில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT