தொண்டர்கள் சந்திப்புக்கான பயணம் தொடங்கிய சசிகலா

தொண்டர்கள் சந்திப்புக்கான பயணம் தொடங்கிய சசிகலா
Updated on
1 min read

தென்காசி: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ள அவர் நேற்று காசிமேஜர்புரத்தில் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன. மக்களுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. சுற்றுலாத் தலமான குற்றாலத்துக்கு செல்லும் சாலைகூட மிகவும் மோசமாக உள்ளது.

தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டும், ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை திறக்கவில்லை. பல அரசுத் துறை அலுவலகங்கள் நெல்லையிலேயே செயல்படுகின்றன. அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in