

குரோம்பேட்டை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னைபாலு, ராமு (எ) வினோத், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன் (எ) மன்னா சந்தோஷ், விஜய், அப்பு, சிவசக்தி (எ) சிவா, கோகுல் (எ) கோழி ஆகிய 9 பேர் தனி வேனில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸார் அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அருள் என்பவரை தனி வாகனத்தில் அழைத்து வந்த போலீஸார் அவருக்கு பரிசோதனை முடித்த பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். போலீஸ் காவல் இன்று முடிவடை வதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்த மல்லி சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.