Published : 16 Jul 2024 05:15 AM
Last Updated : 16 Jul 2024 05:15 AM
சென்னை: ரயில்வேயில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை வழங்கக் கோரி, பல்வேறு இடங்களில்எஸ்ஆர்எம்யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு வேலையில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை பாதுகாக்க வேண்டும், கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், 8-வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சார்பில் சென்னை,திருச்சி உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கோட்டத்தில் தாம்பரம், பேசின்பாலம், ஆவடி, ராயபுரம் ஆகிய பணிமனைகள், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை, அரக்கோணம், மூர்மார்க்கெட் வளாகம், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை 3 ஷிப்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேசின்பாலம் பணிமனை மற்றும் சென்னை கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ஆர்எம்யூ சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன், தாம்பரம் பணிமனையில் எஸ்ஆர்எம்யூ உதவி பொதுச் செயலாளர் ஈஸ்வர்லால் ஆகியோர் தலைமை வகித்துபேசினர்.
பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும், 8-வதுமத்திய ஊதிய குழுவை அமைக்கவேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு குழுவையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT