Published : 15 Jul 2024 09:32 AM
Last Updated : 15 Jul 2024 09:32 AM
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 1,513 வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட 8 வகையான உயர் அறுவை சிகிச்சைகளும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,829 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT