தமிழக விவசாயிகள் மீது திமுக அரசுக்கு அக்கறையில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
Updated on
1 min read

வேலூர்: தமிழக விவசாயிகள் மீது திமுக அரசுக்கு அக்கறையில்லை, கூட்டணிக் கட்சிகள்தான் திமுகவுக்கு முக்கியம். அதனால்தான் காவிரி விவகாரத்தில் முதல்வர் மவுனம் சாதிக்கிறார் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டியின் தந்தை ஜெகநாதன் ரெட்டி கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டுக்கு நேற்று வந்த பழனிசாமி, ஜெகநாதன் ரெட்டியின் படத்துக்கு மலர்கள் தூவி, அஞ்சலி செலுத் தினார்.

முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பணபலம், அதிகார பலத்தால் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள் ளது. காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள் ளது.

கர்நாடகா அரசு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்று, ஒவ்வோர் ஆண்டும் வழங்க வேண்டிய தண்ணீரை, உரிய அளவுதமிழகத்துக்கு வழங்க வேண்டும்.ஆனால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு முறைப்படி தண்ணீரை வழங்குவதில்லை.

தமிழக விவசாயிகளைப் பற்றியும், பொதுமக்களைப் பற்றியும் திமுக அரசுக்கு கவலையில்லை. விவசாயிகள் மீது அக்கறையும் இல்லை. திமுகவுக்கு கூட்டணிக் கட்சிகள் தான் முக்கியம். அதனால்தான் முதல்வர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளது. அதை தேக்கி வைக்க முடியாமல்தான், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக்கொன்றதில், பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை என அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், அவசர என்கவுன்ட்டர் சம்பவம் சந்தே கத்தை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in