

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ‘கூகுள் மீட்’ காணொலி காட்சி செயலி மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ஆகியோரால் ஜூலை16, 18, 19 தேதிகளில் நடத்தப்படும். ஓய்வுபெற ஓராண்டு உள்ள பணியாளர்கள் இதில் பங்கேற்க தேவையில்லை.