

தமிழகத்தில் 2016-ல் நடக்கும் சட்டப் பேரவை தேர்லில் பாமக தலைமை யில் கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருக் கழுக்குன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை. பாமக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். இளம்வயதில் பெண்கள் பலர் விதவைகளாகிறார்கள். இதை தடுக்க முழுமையான மதுவிலக்கை தமிழகத்தில் அமல் படுத்த வேண்டும் என்றார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை வாசித் தார். அதன் விவரம்: மாமல்லபுரம் காவல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியிலும், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும் பாமகவினர் மீது பிசிஆர் (தீண்டாமை வன் கொடுமை தடுப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சமுதாயங்களும் ஒற்றுமையாக வாழும் நேரத்தில் இதுபோன்று பிசிஆர் வழக்கு களை பதிவு செய்து இரு சமூகங்க ளுக்கிடையே பிரச்சினை ஏற்படுத்தி வரும் மாமல்லபுரம் டிஎஸ்பி, திருக்கழுக்குன்றம் ஆய்வாளர் ஆகியோருக்கு பாமக கண்டனம் தெரிவிக்கிறது.
2016-ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் செங்கல் பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதி களில் தலா 1 லட்சம் பேரை உறுப்பி னர்களாக சேர்க்க வேண்டும். இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளான செப்டம்பர் 17-ம் தேதி கிராமங்கள் தோறும் கட்சிக் கொடியேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் திருக்கச்சூர் ஆறுமுகம், பொன். கங்காதரன், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் பி.வி.கே.வாசு, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வா.கோ.ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.