தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன ஆலைக்கு சுற்று சூழல் துறை அனுமதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில், ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில்,தூத்துக்குடியில் மட்டும் 2 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை அமைக்க ரூ.26 ஆயிரம்கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை தமிழக அரசுடன் மேற்கொண்டன.

இதில் ஒன்று, வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட். இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து,தூத்துக்குடி சிலாநத்தம் பகுதியில் 408 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரிமாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், அந்த நிறுவனம் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தது. இதை ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கட்டுமானப்பணிகளுக்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக ரூ.1120 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையிலான 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனைக் களம் அமைக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in