Published : 12 Jul 2024 05:29 AM
Last Updated : 12 Jul 2024 05:29 AM
சென்னை: பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு, மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெருவோர உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 627 தெருவோர உணவக வியாபாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தோல் தொடர்பான பிரச்சினை ஏதேனும் உள்ளதா என்பது போன்றவற்றை மருத்துவ குழுவினர் பரிசோதித்து பதிவு உரிமம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கினர்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், “சென்னை முழுதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல்,மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT