Published : 12 Jul 2024 06:49 AM
Last Updated : 12 Jul 2024 06:49 AM
சென்னை: ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கபதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். எனவேஅந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது.
தற்போது ஆனி மாதத்தின் கடைசிசுபமுகூர்த்த தினமான இன்று(ஜூலை 12-ம் தேதி) அதிகளவில்பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT