Published : 12 Jul 2024 05:22 AM
Last Updated : 12 Jul 2024 05:22 AM

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் நிலையம் அருகே ரயில்வே ஸ்டோரில் தீ விபத்து: விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில்நிலையம் அருகே தெற்கு ரயில்வேஎஸ் அண்ட் டி திட்டப் பிரிவுக்கு உட்பட்ட சிக்னல் மற்றும் டெலிகாம்ஸ்டோரில் மின்னணுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் வழித்தடத்தில் பெரம்பூர்லோகோ ஒர்க்ஸ் நிலையம் அருகேசிக்னல் மற்றும் டெலிகாம் ஸ்டோர்கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ரயில்வே மின்சார கேபிள், மின்உபகரணங்கள், சிக்னல் தொடர்பாக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் நேற்று காலை 7:30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மற்ற இடங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து தீயணைப்பு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செம்பியம், கொளத்தூர்வியாசர்பாடி உட்பட இடங்களில்இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள், மின் கேபிள்களை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

மதியம் 1 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்தப் பணியில் தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக ரயில்வே ஊழியர்களும் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் கேபிள்கள், மின் உபகரணங்கள் உட்படபல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. அயனாவரம் போலீஸார்விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, 3உறுப்பினர் குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x