கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: மேலும் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: மேலும் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகரத்தை ஒட்டிய கருணாபுரம், மாடூர், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 229 பேர், கடந்த ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் புதுச்சேரி ஜிம்பரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்ற வந்த 4 பேரில், ரோடு மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதையடுத்து விஷச்சாராய உயிரிழப்பு 6 பெண்கள் உட்பட 66 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்பனை செய்தவர்கள், கள்ளச் சாராயத்தில் ரசாயனப் பொருட்களை கலந்தவர்கள், ராசாயனப் பொருட்களை விநியோகித்தவர்கள் என 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 11 பேரை ஏற்கெனவே போலீஸ் காவலில் எடுத்து 3 நாள் விசாரணை நடத்தினர். தற்போது மீண்டும் பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் இன்று (ஜூலை 10) மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in