Published : 30 May 2018 10:25 AM
Last Updated : 30 May 2018 10:25 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வில் சிறைக் கைதிகள் 45 பேர் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் சிறைக் கைதிகள் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து தான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகள் போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது.

8 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,724 அரசுப் பள்ளிகளில் 188 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வை 62 சிறைக் கைதிகள் எழுதினர். இதில் 45 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை சிறை அதிகாரிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x