தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகராக சவுமியா சுவாமிநாதன் நியமனம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகராக சவுமியா சுவாமிநாதன் நியமனம்
Updated on
1 min read

சென்னை: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

காசநோய் ஒழிப்புக்கான திட்ட இலக்குகளை அடைய, தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளை அவர் வழங்குவார். மேலும், கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதுடன், ஆராய்ச்சி குறித்து ஆலோசனைகளையும் அவர் வழங்குவார்.

சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in