சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பை வரவேற்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து

சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பை வரவேற்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து

Published on

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சசிகலா தொண்டர்களை சந்திக்க வருகிறார். அதை வரவேற்கிறேன். மேலும், 90 சதவீத தொண்டர்களை இணைத்து விட்டோம் என அவர் கூறியதையும் வரவேற்கிறோம்.

மன்னிப்புக் கடிதம் கொடுத்தாலும் ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று பழனிசாமி கூறுகிறார். என்னை மன்னிப்புக் கடிதம்கொடுக்கச் சொல்வதற்கு அவர்யார்? அதிமுக பொதுச் செயலாளராக இருப்பதாக அவர் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம். இது தொடர்பான வழக்கு, சென்னைஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிடாவிட்டாலும், இரட்டை இலையுடன் இருக்கும்மாங்கனிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறுஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in