Published : 10 Jul 2024 05:48 AM
Last Updated : 10 Jul 2024 05:48 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், தொ டர் காத்திருப்பு போராட்டம் அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்றது. படம்: ம.பி

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின்தலைவர் ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டசெயலாளர்கள் கண்ணன், ரவிக்குமார், தயாளன் உள்ளிட்டோர்பங்கேற்றனர். அப்போது, அவர் கள் பேசியதாவது:

மின்வாரியத்தில் களஉதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி மின்பொறியாளர், உதவி வரைவாளர் ஆகிய பதவிகள் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களாக உள்ளன. இவை தவிர, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர பதவிகளில் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்தடையை விரைவாக நீக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பெறும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சத்தை மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்வாரிய ஊழியர்கள் மரணம் அடைய நேரிட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும். 2019 ஜன.1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

தற்காலிகமாக தள்ளிவைப்பு: இதற்கிடையே, இப்போராட்டம் தொடர்பாக, மின்வாரியத் தலைவருடன், தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, வரும் 12-ம் தேதி மின்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்வதாக மின்வாரிய தலைவர் உறுதியளித்தார்.

மேலும்,இதுதொடர்பாக நிதித் துறை மற்றும் எரிசக்தி துறை செயலாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மின்வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, இதை ஏற்று காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதனிடையே, மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு மாநில சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x