Published : 10 Jul 2024 06:08 AM
Last Updated : 10 Jul 2024 06:08 AM
சென்னை: தென் மத்திய ரயில்வேயில் விஜயவாடா யார்டில் பொறியியல் பணி காரணமாக 8 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் விவரம்:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.4முதல் ஆக.11 வரை அதிகாலை 4.55மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (17237), மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டாவுக்கு ஆக.4 முதல் ஆக.11 வரைமாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (17238) ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.5முதல் ஆக.10 வரை காலை 6.10மணிக்கு இயக்கப்படும்பினாகினி விரைவு ரயில் (12711), சென்னைசென்ட்ரல் - விஜயவாடாவுக்கு ஆக.5 முதல் ஆக. 10 வரை மதியம் 2.05 மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (12712), சென்னை சென்ட்ரல் - விஜயவாடாவுக்கு ஆக.5, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் ஜன் சதாப்திவிரைவு ரயில் (12077), விஜயவாடா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.5, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில்பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் ஜன்சதாப்தி விரைவு ரயில் (12078) ஆகிய4 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர, 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
மின்சார ரயில் சேவை மாற்றம்: அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கத்தில், பொறியியல் பணி காரணமாக, மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
திருத்தணி - சென்ட்ரலுக்கு ஜூலை 12, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30, 5.30 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர, 3 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT